ஓமானில் தஞ்சமடைந்துள்ள 74 இலங்கை பணிப் பெண்கள் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

125 0

ஓமான் நாட்டுக்கு பணிப் பெண்களாக வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு சித்திரைவதைக்குள்ளாகி இலங்கை தூதரகத்தில் தஞ்சடைந்து 9 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 பணிப்பெண்கள் தங்களை நாட்டிற்கு அனுப்புமாறு  உருக்கமாக கோரிக்கை விடுத்து காணொளி வெளியிட்டுள்ளனர்.

நாட்டிலுள்ள முகவர்கள் ஊடாக ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற பணிப் பெண்கள் வீட்டின் உரிமையாளர்களால் அடித்தும், நெருப்பால் சூடு வைத்தும் மற்றும் சம்பளம் வழங்காமை போன்ற பல்வேறு சித்திரவதை காரணமாக அங்கிருந்து வெளியேறி இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு  தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன்,  தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உறவினர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியாதளவிற்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு திருமணம் கடந்த உறவின் மூலம் கருவுற்றவர்களை உடனடியாக நாட்டுக்கு அனுப்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமாக உள்ளவர்கள்  எவரையும் நாட்டுக்கு அனுப்பாது 9 மாதம் வரை தடுத்து வைத்துள்ளதுடன் பலர் பல நோய்களினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றதுடன் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் போல எங்களை நடாத்துகின்றனர்.

இங்கு நடக்கும் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரிவிக்க முடியாத நிலையிலுள்ளதுடன் இங்கிருந்து நாட்டுக்கு செல்லுகின்ற பெண் ஒருவரின் கையடக்க தொலைபேசியில் நாங்கள் உரையாடி அவரிடம் இதனை வெளியிடுமாறு தெரிவித்து கதைத்து அனுப்பியுள்ளோம். எனவே எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள் கைகூப்பி கேட்கின்றோம் என கோரிக்கை விடுத்துள்னர்.