கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சனை

270 0
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள ஏற்று நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை பலரும் அபகரித்துள்ளமையினால் திட்டத்தினை தொடரமுடியாத தன்மை காணப்படுவதாக மாவட்டச் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இரணைமடுக் குளத்தின் அபிவிருத்தித் திட்டத்தின்  பங்குதாரர்களிற்கான கலந்துரையாடல்   மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் தலமையில் இடம்மெற்றபோதே மேற்படி விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது.
இக் கூட்டத்தினில் இவை தொடர்பினில் மேலும் தெரிவிக்கையில் ,
இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள ஏற்று நீர்ப்பாசனத்திற்கான படிகள் தற்போது ஆரம்பித்து செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செயல்படுத்தும் பிரதேசங்களில் ரிவரேசன் காணிகளாக  ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை அதன் அருகில் வசிப்பவர்கள்  பலரும் ஆக்கிரமித்து விட்டனர் . இதனால் திட்டத்தினை முழுமை செய்ய முடியவில்லை. இங்கு இடம்பெற்ற 30 வருட யுத்தம் காரணமாக அவை இடம்பெற்று விட்டது. எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேபோன்று இப்பகுதிகளில் இ.மி.சபையினரும் பல மின் கம்பங்களை நாட்டியுள்ளனர் அவற்றினையும் பின் நகர்த்தி தருவதோடு இங்கே கடந்த 25 ஆண்டுகளாக மரங்கள் வளர்ந்து இன்று பாரிய மரங்களாக காட்சி தருகின்றன.அவற்றினையும் வன வளப் பகுதியினர் அகற்றித் தர வேண்டும். எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதேபோன்று இரணைமடுக்குளத்தின் வலது கரை வாய்க்காலில் சுமார் 9 அடி உயரத்திற்கு சேறு நிறைந்துள்ளமையினால் குளத்தினில் அதற்கு குறைந்த நீர் உள்ள சந்தர்ப்பத்தினில் வாய்க்காலில் நீர் பாச்ச முடியவில்லை. எனவே அதனையும் அகற்றி அங்கே சீமேந்தின் மூலம் சுவர் அமைத்து தருமாறும் விவசாயிகளினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இவற்றினை ஆராய்ந்த குழுவினர் வலது கரை வாய்க்காலை அமைக்க இணக்கம் தெரிவித்ததோடு வாய்க்கால் பிரதேசத்தினை ஆக்கிரமித்துள்ள தனியார் அதனை உடன் விடுவிக்க வேண்டும் அதனை விடுவிக்கும் முயற்சினை மாவட்டச் செயலகம் விவசாய சம்மேளனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை அங்கே நாட்டப்பட்டுள்ள மின்கம்பங்களை பின் நகர்த்துவதற்கு இ.மி.சபையினர் இணக்கம் தெரிவித்ததோடு அப்பகுதியில் வளர்ந்துள்ள மரங்களை அகற்ற வனவளத் திணைக்களத்தினரும் இணக்கம் தெரிவித்தனர்.