கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இல்லை

93 0
கீரி சம்பாவிற்கு அரசாங்கம் அறிவித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
2022 மே 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின்படி, ஒரு கிலோகிராம் கீரி சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.260 ஆக இருக்கும் என நுகர்வோர் விவகார அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கீரி சம்பா மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற அனைத்து கூற்றுகளையும் நுகர்வோர் விவகார அதிகார சபை நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீரி சம்பாவை அரசாங்கம் அறிவித்த விலைக்கு மேல் வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் விற்பனை செய்யக் கூடாது.வர்த்தகர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறும் எந்தவொரு தனிநபருக்கும் ரூ 100,000 மற்றும் ரூ. 500,000 வரை அபராதம் விதிக்கப்படும் அத்துடன் ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்தால் 1977 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.