வடக்கு, கிழக்கு ஆகிய கடல் எல்லை பகுதிக்குள் காற்றின் வேகம் பலமாக காணப்படுவதால் மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளதுடன், இந்த கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
அத்துடன் மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளிலும்,மத்திய மலைநாட்டின் மேற்கு பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
தென்கிழக்கு கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காற்றில் வேகம் வழமைக்கு மாறாக பலத்த தன்மையில் காணப்படும் இந்த தன்மை இன்றைய தினம் முழுவதும் நிலவ கூடும்.
இதனால் வடக்கு கடற்பரப்பில் 05 – 110 கிலோமீற்றர் தூரம் வரையான எல்லை பகுதி,கிழக்கு கடற்பரப்பில் 90-100 கிலோமீற்றர் தூரம் வரையான எல்லை பகுதி ஆகியவற்றின் காற்றின் வேகம் இன்று மாலை 03 மணி வரை அல்லது அதனை காட்டிலும் அதிகளவான காலப்பகுதியில் வேகமாக வீச கூடும்.
ஆகவே இந்த கடல் எல்லைக்குள் மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.