விசிக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 25% இளைஞர்கள், தலா 10% பெண்கள், பட்டியலினத்தைச் சாராதவர்களை இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் புதிய முயற்சியை நாம் மேற்கொள்கிறோம். பலருக்கு வழிகாட்டக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை நாம் எடுத்திருக்கிறோம். விசிகவை சமூக இயக்கம் என்ற நிலையிலிருந்து, அரசியல் இயக்கமாக உருவாக்கும் பரிணாம மாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம்.
பட்டியலினத்தவர் அல்லாதவர்கள், பெண்கள், இளம் தலைமுறை ஆகியோர் இணையவேண்டும் என அறைகூவல் விடுத்தோம். அதன் அடிப்படையில் கட்சியில் முஸ்லிம்மக்கள் கணிசமாகச் சேர்ந்தனர். பட்டியலினம்அல்லாத கிறிஸ்தவர்கள், பிசி, எம்பிசி வகுப்பைச் சேர்ந்த சிலரும் சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், கட்சியின் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் 10 சதவீதம் பட்டியலினத்தவர்கள் அல்லாதோருக்கு இடமளிக்க இருக்கிறோம். இதை ஒதுக்கீடு என்பதைவிட அதிகாரபரவலாக்கம் என்றே சொல்ல வேண்டும்.