திராவிட கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டுசெல்வோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

86 0

தமிழகத்தை முன்னேற்றிய திராவிடவியல் கோட்பாட்டை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்போம் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் பல்லாவரத்தில் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி, துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்எல்ஏ, வரலட்சுமி எம்எல்ஏ, து.மூர்த்தி, மாவட்டப் பொருளாளர் வெ. விசுவநாதன் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது: தமிழகத்தில் 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசு, தற்போது 2-ம் ஆண்டை நிறைவுசெய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பாழ்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டை மீட்டது உதயசூரியன் ஆட்சி. திராவிடம் யாரையும் பிரிக்காது; அனைவரையும் அரவணைக்கும்.