அமெரிக்காவின் டெக்சாசின் பிரவுன்ஸ்வில்லில் குடியேற்றவாசிகள் மீது கார்ஓன்றுமோதியதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிக்கோவுடனான எல்லையில் உள்ள நகரிலேயே இந்த சம்பவம் இ;டம்பெற்றுள்ளது.
வீடற்றவர்கள்குடியேற்றவாசிகளிற்கான தங்கமொன்றிற்கு அருகில் பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார்மோதியுள்ளது.
மேலும் ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.
காரை செலுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எனினும் இதுவேண்டுமென்றே இடம்பெற்ற சம்பவமா என்பது தெரியவரவில்லை.
முன்னதாக இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என பொலிஸார் தெரிவித்தாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
குறிப்பிட்ட கார் மிகவேகமாக பேருந்து நிலையத்தை நோக்கி ஒடிவருவதை வீடியோக்கள் காண்பித்துள்ளன.
வீடற்றவர்கள் குடியேற்றவாசிகளிற்கான நிலையத்திலிருந்து சுமார் 20 பேர் பேருந்துதரிப்பிடத்திற்கு சென்றனர் அவர்கள் அனைவரும் மெக்சிக்கோவை சேர்ந்தவர்கள் என தக குடியேற்றவாசிகளிற்கான நிலையத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
குடியேற்றவாசிகளிற்கான நிலையத்தில் பெண்கள் குழந்தைகள் ஆண்கள் உள்ளனர் அவர்கள் தங்கள் கண்முன்னால் இந்த துயரத்தை பார்த்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இந்த நகரத்தில் குடியேற்றவாசிகள் குறித்த எந்த எதிர்ப்பையும் காணவில்லை என தெரிவித்துள்ள அவர் எனினும் குடியேற்றவாசிகள் தாங்கள் இதற்கு காரணம் என கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.