மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாலேயே பசில் சிறையில் அடைக்கப்பட்டார்

357 0

maxresdefaultசிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளதாலேயே முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சிறையில் அடைக்கப்பட்டார் என மகிந்த அணியின் ஆதரவாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் அரசியல் பழிவாங்கல், அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்படவுள்ள முரண்பாடான சரத்துகள் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பாயாத்திரை ஒன்று நடாத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து எதிர்வரும் 28ஆம் திகதி நடாத்தப்படவுள்ள மக்கள் பேரணிக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இப்பாதயாத்திரைக்கு மக்களை அணிதிரளுமாறு தான் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அரசாங்கத் தொழில் நிறுவனங்களில் பல்வேறு பழிவாங்கல்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில், இலங்கைப் போக்குவரத்துச் சபையில் சுமார் 1000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் வேலைசெய்யும் பலருக்கு அச்றுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிர்ப்புக்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், மகிந்த ஆதரவு அணியினரை பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.