ஹங்வெல்ல ஆற்றில் நீராடிய இரு பெண்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹங்வெல்ல, உடவத்த, ரணவிரு மாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். இதேவேளை காப்பாற்றப்பட்ட மற்றொரு பெண் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணும், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண்ணும் நேற்று (6) மாலை ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே அவர்கள் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.