கைத்துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் முனையத்துக்குள் நுழைந்த பாதுகாப்பு அதிகாரி

83 0

ட்டுநாயக்கவிலிருந்து சென்னை நோக்கிப் புறப்படவிருந்த விமானம் ஒன்றின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் (ஸ்கை மார்ஷல்)  துப்பாக்கியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் போக்குவரத்துப் பயணிகள் முனையத்துக்கு வந்தபோது, கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால்  அவரது துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

இதன் காரணமாக விமானம் சுமார் நான்கு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒவ்வொரு விமானத்திலும் விமானம், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்காக ஒரு பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியை பாதுகாப்பு அதிகாரி தனது  விமானத்திலிருந்து வெளியே கொண்டுவருவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது,

பாதுகாப்பு அதிகாரி விமானத்தை விட்டு வெளியே செல்ல விரும்பினால், அவர் துப்பாக்கியை விமானத்தின் தலைமை விமானியிடம் ஒப்படைக்கவேண்டிய நிலையிலேயே இந்த அதிகாரி தனது துப்பாக்கியுடன் வெளியே வந்து மீளவும்  உட்செல்ல முயன்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.