4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!

80 0
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (06) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்தில் இதுவே தனது கடைசி உரையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 மாகாணங்களின் ஆளுநர்களை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளார்.

சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் அத தெரண வினவியது.

இது குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அறிவித்தல் வழங்கினால் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் எனவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில், தெரிவித்தார்.