பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி – ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், நிர்வாக காரணங்களுக்காக பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் (தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி) தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.