அமெரிக்காவின் டெக்சாஸில் வணிக வளாகத்தில் துப்பாக்கிபிரயோகம் – பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம்

93 0
image

அமெரிக்காவின் டெக்சாஸில்  வணிக வளாகமொன்றில் இடம்பெற்றுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன

பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார்.

டெக்சாஸின் டலஸில் உள்ள அலன் பிரீமியம் வணிகவளாகத்திலேயே இந்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாக்குதல் காரணமாக எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை என்னால் தெரிவிக்க முடியாது அதனை சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடம் விட்டுவிடுகின்றேன் என காங்கிரஸ் உறுப்பினர் கெய்த்செல்வ் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் கொல்லப்பட்டுள்ளார்  ஒருவரே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனவும் காங்கிரஸ் உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிதாக்குதலை மேற்கொண்ட ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் சிஎன்என்னிற்கு உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது நபர் ஒருவர் இருக்கலாம் என்ற அடிப்படையில் தேடுதல் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரும் துன்பியல் நிகழ்வு என இந்த சம்பவத்தை டெக்சாஸ் ஆளுநர் தெரிவித்துள்ளார்.