இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜெயவர்தன தேசிய விளையாட்டு சபை தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மஹேல, விளையாட்டுச் சபையின் தலைவர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.
பதவி விலகுவதற்கான காரணங்கள் வெளியிடப்படாத நிலையில், விளையாட்டுச் சபையின் தலைவர் மஹேல உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.