கடந்த ஒரு தசாப்தகாலத்தில் பிரிட்டனின் முடியாட்சி குறித்த தங்கள் கருத்துக்கள் மோசமடைந்துள்ளதாக பிரிட்டிஸ் மக்கள் கருதுகின்றனர் என்பது சிஎன்என்னின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
மன்னர் சார்ல்ஸின் முடிசூடும் நிகழ்விற்கு முன்னர் இதனை தெரிவித்துள்ள சிஎன்என் தனது முடிசூட்டும் நிகழ்வின்போது மன்னர் சார்ல்ஸ் கடும் சவால்களை எதிர்கொள்கின்றார் எனவும் தெரிவித்துள்ளது.
பத்து வருடத்திற்கு முன்னர் அரசகுடும்பம் குறித்து காணப்பட்ட கருத்தினை விட அதிகளவு எதிர்மறையான கருத்தினை கொண்டுள்ளதாக கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 36 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஸ் மகாராணியின் மரணம், வேகமாக மாறிவரும் காலத்திற்கு மத்தியில் முடியாட்சியின் கடமைக்கான ஒரு உறுதியான அர்ப்பணிப்பால் வரையறுக்கப்பட்ட ஒரு சகாப்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தது.
கடந்த தசாப்தத்தில் முடியாட்சி குறித்த தங்கள் கருத்து மேலும் சாதகமாக மாறியுள்ளது என 21 வீதமானவர்கள் மாத்திரம் கருத்துவெளியிட்டுள்ளனர்.
பத்தில் மூவர் அரசகுடும்பத்தின் செய்திகள் குறித்து தாங்கள் ஆர்வத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.22 வீதமானவர்;கள் தங்கள் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாரம்பரியம் மற்றும் ஆடம்பரத்தின் அற்புதமான கலவையாக காணப்படவுள்ள இன்றைய முடிசூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக பெரும்பாலான பிரிட்டிஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் இரண்டு முடிசூட்டும் நிகழ்விற்கு இடையில் உள்ள இடைவெளி காரணமாக மக்கள் தொகை மதம்மற்றும் சமூகமாற்றம் போன்ற விடயங்களில் முடியாட்சி குறித்த அணுகுமுறைகள் மாறியுள்ளன.
முடிசூட்டும் நிகழ்வு குறித்து பிரிட்டனின் மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவது சிஎன்என்னின் கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது.
அரசகுடும்பம் பற்றிய அதன் உறுப்பினர்கள் பற்றிய பரந்துபட்ட அபிப்பிராயமும் தலைமுறைபிளவுகளால் மாற்றமடைந்துள்ளதை கருத்துக்கணிப்பு புலப்படுத்தியுள்ளது.
அனேகமானவர்கள் இன்று நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 40வீதமானவர்கள் அதனை பார்வையிடப்போவதாக தெரிவித்துள்ளனர்,28 பேர் முடிசூடும் நிகழ்வின் இசைநிகழ்வை பார்வையிடப்போவதாக தெரிவித்துள்ளனர்,7 வீதமானவர்கள் பிக் ஹெல்ப் முயற்சியின் ஒரு பகுதியாக தொண்டர்களா கலந்துகொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர், வேறு சிலர் முற்றாக இதனை முடிசூட்டும் நிகழ்வை தவிர்க்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.
35 வயது முதல் 54 வயதிற்கு இடைப்பட்டவர்களில் 37 வீதமானவர்களும் 35 வயதிற்கு உட்பட்டவர்களில் 31வீதமானவர்களும் முடிசூடும் நிகழ்வை பார்வையிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தங்கள் வாழ்க்கையுடன் எந்த விதத்திலும் தொடர்பற்ற முடியாட்சி அல்லது அரசகுடும்பம் குறித்து அனேகமான இளம் பிரிட்டிஸ் பிரஜைகள் விருப்பமின்மையை வெளியிட்டுள்ளனர்.