“இன்று விதியின் நாள்” – சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வு குறித்து பிரித்தானிய செய்தித்தாள்கள் தலைப்பு

87 0

மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டும் நிகழ்வு  இன்று இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு பெரும் முக்கியத்துவம் வழங்கியுள்ள பிரித்தானிய செய்தித்தாள்கள் விதியின் நாள் என முதல்பக்கத்தில் தலைப்பிட்டுள்ளன.

இறுதியாக இன்று விதியின் நாள் வந்துவிட்டது என பிரித்தானிய நாளேடுகள் தெரிவித்துள்ளன.

 

விதியின் நாள் என டெய்லி எக்ஸ்பிரஸ்  இன்றைய நாளை வர்ணித்துள்ளது.

முடிசூட்டும் நிகழ்வின்போது மன்னர்  அணியவுள்ள பாரிய கிரீடத்தின்  படத்தை வெளியிட்டுள்ள டெய்லி மிரர் மன்னர் கிரீடத்தின் கனத்தை மற்றுமல்ல வரலாற்றின் கனத்தையும சுமக்கப்போகின்றார் என தெரிவித்துள்ளது.

மன்னர் தனது தலைவிதியின் நாளிற்கான தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கின்றார் என தெரிவித்துள்ள டெய்லிமெய்ல் மன்னர் சார்ல்சின் இளமைக்கால படமொன்றையும் வெளியிட்டுள்ளது- அவர் நீண்டகாலமாக காத்திருந்தார் என்பதை வெளிப்படுத்துவதற்காக

மத்திய லண்டனில் வெள்ளிக்கிழமை சார்ல்ஸ் பொதுமக்களை சந்தித்த படத்தை வெளியிட்டுள்ள தி டைம்ஸ் 74 வருடங்கள் காத்திருந்த பின்னர் மன்னர் எப்படி தனது தலைவிதியை பூர்த்திசெய்வார் என குறிப்பிட்டுள்ளது.

தி சன் மகாராணி கமிலாவின் முடியின் படத்தை வெளியிட்டுள்ளது

தி வீக்என்ட் சற்று வித்தியாசமான செய்தியொன்றை வெளியிட்டுள்ளதுடன் ஐக்கிய இராச்சியம் பிரிட்டனின் அரசகுடும்பத்திற்கு இன்னமும் ஆதரவளிக்கின்றதா என்ற கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. கேள்வி கேட்கப்பட்டவர்களில் 52 வீதமானவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்தனர் 23 வீதமானவர்கள் தங்களை குடியரசுவாதிகள் என தெரிவித்தனர் என வீக்என்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

தி ஸ்டார் முடிசூட்டும் நிகழ்வில் முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ள அயர்லாந்தை சேர்ந்த சீமெஸ் என்ற நாயின் படத்தை வெளியிட்டுள்ளது.