கம்பஹா மாவட்டத்தில் பல பிரதேசக்களிலும் இன்று (04) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. அத்துடன் நீர்கொழும்பு மற்றும் அயற்பிரதேசங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்கள் தொழிலுக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீர்கொழும்பு நகரின் சில உள் வீதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. தளுபத்தை பல்லன்சேனை வீதி, வெளிஹேன பிரதேசத்துக்கு செல்லும் பேஸ் லைன் வீதி, வெளிஹேன வீதி ஆகிய வீதிகளின் சில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக வாகன சாரதிகளும் பொதுமக்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை சீரற்ற கால நிலை காரணமாக நீர்கொழும்பு மீனவர்களில் அநேகமானவர்கள் கடலுக்கு தொழிலுக்கு செல்லவில்லை.