மகாவலி அதிகார சபையின் ரம்புக்கன்ஓயா பிரதேசத்தில் உள்ள தமது பாரம்பரிய பூர்வீக நிலங்களை பல்வேறு பயிர்ச் செய்கைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராக பழங்குடி இன தலைவர் உருவரிகே வன்னியாலத்தோ தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை செப்டம்பர் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ரம்புக்கன்ஓயா பிரதேசத்தில் உள்ள தனது பூர்வீக நிலத்தை சோளம் பயிரிடுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் மகாவலி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக மனுவில் பழங்குடியின தலைவர் தெரிவித்துள்ளார்.