ஆசிய அபிவிருத்தி வங்கி தலைவருடன் அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

129 0

இலங்கைக்கு குறைந்த வட்டியில் சலுகைக் கடன்களை வழங்குமாறு வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் வலியுறுத்தியுள்ளார்.

தென்கொரியாவின் சியோலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரை அமைச்சர் அலி சப்ரி சந்தித்தார்.

இதன்போது இலங்கை தற்போது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதனால் குறைந்த வட்டியில் சலுகைக்கடன்களை வழங்கமுடியும் என்பதை அமைச்சர் சப்ரி சுட்டிக்காட்டினார்.

இதேபோன்ற கோரிக்கையை உலக வங்கியிடம் முன்வைத்ததாகவும், அதை அந்த வங்;கி ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.