மக்களுக்கு ஜனாதிபதி கொடுக்கும் சலுகை தமிழரின் 75 வருடகால பிரச்சினைக்கு தீர்வு அல்ல என நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம்(02.05.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 13ஆவது திருத்தச்சட்டம் எங்கள் பிரச்சினைக்கு தீர்வாகாது. மாறாக எங்கள் உரிமை மீள கையளிக்கப்பட வேண்டும்.
13ஆவது திருத்த சட்டம் ஒரு தற்காலிக தீர்வே தவிர அதை வைத்து தமிழ்மக்களுக்கு தீர்வளிக்கப்போகின்றேன் என கூறுவது முற்றிலும் பிழையான விடயம்.
காரணம் என்னவென்றால் 7 மாகாணங்களில் பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்கள் 2 மாகாணங்களில் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் பேசும் மக்களை அடிமைகளாக எண்ணுகிறார்கள்.
இதேவேளை 13ஆவது திருத்தச்சட்டம் தற்போதும் நடைமுறையிலிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.