நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஐ.தே.க அழைப்பு!

78 0

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனில் நீண்டகால திட்டங்கள் இருக்க வேண்டும். இருப்பினும் கடந்த காலங்களில் நிவாரணங்களை காட்டி மக்களின் வாக்குகளை பலர் பெற்றுக்கொண்டனர். இதனாலேயே நாட்டின் பொருளாதாரம் வீச்சியடைகின்றது.

மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிப்பவர்கள் வரி கொள்கையை அறிமுகப்படுத்தும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சலுகைகளை மாத்திரமே அவர்கள் எதிர்பார்க்கிறனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரித்து, 2048ல் அபிவிருத்துயடைந்த நாடாக இலங்கையை மாற்றும் இலக்கை நோக்கி பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்.

அத்துடன் வங்குராதே;து அடைந்த நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்றார். வீழ்ச்சியடைந்திருக்கும் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தபோது, அதனை பெறமுடியாது என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால் 3 மாதங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொண்டோம். நாடாளுமன்றத்தில் நாணய நிதியத்தின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்தபோது அதற்கு வாக்களிக்காமல் பின்கதவால் சென்றனர். இவ்வாறு செயற்பட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

அதனால் நாட்டை முன்னுக்கு கொண்டுசெல்ல கட்சி பேதங்களை மறந்து நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.