பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது, பாதுகாப்புத் தலைக்கவசத்தால் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கி காயப்படுத்திய கடற்படை வீரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழுவொன்று திங்கட்கிழமை (1) பிற்பகல் சீதுவவில் வீதித் தடையை ஏற்படுத்தி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
பொலிஸாரின் சமிக்ஞைகளை மீறி சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளை முன்னோக்கிச் செலுத்தியபோது, சந்தேகநபர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் துரத்திச் சென்று சீதுவ நகருக்கு அருகில் தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போதே, கடற்படை வீரர் உட்பட இருவர் பொலிஸார் இருவரையும் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.