களனி பியகம வீதியில் இடம்பெற்ற இசைக் கச்சேரியின் போது பாடகர் ஒருவர் பாடிக் கொண்டிருந்தபோது தானும் மேடையில் ஏறி பாடியமைக்காக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேலியகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 52 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி இரவு களனி பகுதி விளையாட்டு மைதானம் ஒன்றில் இந்த இசைக் கச்சேரி இடம்பெற்றதாகவும், அங்கு பாதுகாப்புக் கடமைகளுக்காக இந்தக் கான்ஸ்டபிள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதன்போதே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தானும் மேடையில் பாடியுள்ளார்
இந்த உத்தியோகத்தரின் முறைகேடு தொடர்பில் களனி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த விலாராச்சி விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அதனையடுத்தே இந்தக் கான்ஸ்டபிள் நேற்று (1) முதல் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.