ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இலங்கை மன்றக் கல்லூரியில் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது.
இதன்போது கட்சியின் சிரேஷ்ட்டத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த கூட்டத்தில் வைத்து, ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த வெட் வரி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.