குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் – அமெரிக்காவின் அதிரடி முடிவு என்ன தெரியுமா?

96 0

குவாட் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி எவ்வித திட்டமும் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு விரைவில் நடைபெற இருப்பதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

ஆஸ்திரேலிய பிரமதர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் குவாட் உச்சிமாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த உச்சுமாநாடு அடுத்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது.   குவாட் அமைப்பு துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகின்றன. இந்த அமைப்பு அதன் இளம் காலத்திலேயே உள்ளது. இதனிடையே புதிய உறுப்பினர்களை சேர்ப்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை, என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரின் ஜீன் பெர்ரி தெரிவித்துள்ளார். இதற்கு குவாட் உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“சிட்னி மாநாட்டில் இந்தோ பசிபிக் பகுதியில் குவாட் உறுப்பினர்கள் காலநிலை, சர்வேதச ஆரோக்கியம், உள்கட்டமைப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் கூட்டணி அமைத்தல் தொடர்பான வாய்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். குவாட் அமைப்பின் முக்கிய குறிக்கோள் இந்தோ பசிபிக் நலன் சார்ந்ததாகவே இருக்கிறது. இந்த சமயத்தில் நீட்டிப்பு அல்லது அமைப்பை விரிவுப்படுத்துவது பற்றிய பேச்சுகளுக்கு இடமில்லை,” என்று அவர் தெரிவித்தார்.