அவுஸ்திரேலியாவின் விருதுபெற்ற சமையல்கலை நிபுணர் ஜொக் சோன்ஃப்ரில்லோ, சமையல் தொடர்பான தனது புதிய தொடர் வெளியாகவிருந்த தருணத்தில் 46 வயதில் உயிரிழந்தமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரபல சமையல்கலை நிபுணரான ஜொக் சோன்ஃப்ரில்லோ, உலகின் தலைசிறந்த உணவகங்களில் உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற சமையல்கலை நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதுடன் அவுஸ்திரேலியாவின் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியிலும் தோன்றியிருந்தார்.
ஜொக் சோன்ஃப்ரில்லோ,பிரிட்டனின் பிரபல சமையல்கலை நிபுணர் ஜேமி ஒலிவருடன் இணைந்து தோன்றும் மாஸ்டர் செவ் நிகழ்ச்சியின் பீரிமீயர் வெளியாகவிருந்த தருணத்தில் ஜக்சோன்;ப்ரிலின் மரணம் நிகழ்ந்துள்ளது.
அவரது மரணத்தை உறுதி செய்துள்ள அவுஸ்திரேலியாவின் நெட்வேர்க் 10 குறிப்பிட்ட நிகழ்ச்சியை ஒலிபரப்புவதை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜொக் சோன்ஃப்ரில்லோ, தனது தொழில்வாழ்க்கையை லண்டனில் சமையல்கலை நிபுணர்மார்க்கோ பியரே வைட்டின் கீழ் ஆரம்பித்தார் – அவர் தனது உயிரை காப்பாற்றியவர் என ஜக் ஒரு முறை தெரிவித்திருந்தார்.
இளவயதில் போதைப்பொருளிற்கு அடிமையானதாகவும் பின்னர்அந்த பழக்கம் தன்னை தொடர்ந்ததாகவும் ஜொக் சோன்ஃப்ரில்லோ, தனது வாழ்க்கை வரலாற்று நூலில் குறிப்பிட்டிருந்தார்.
போதைப்பொருள் பழக்கம் தன்னை மிகவும் இருண்ட பாதைகளில் கொண்டு சென்றது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
1999 இல் பிரிட்டனிலிருந்து புறப்பட்டு அவுஸ்திரேலியா வந்த அவர் சிட்னியில் உள்ள ரெஸ்டோரன்ட் 41 இன் தலைமை சமையல்நிபுணராக ஸ்தாபித்துக்கொண்டார்.
ஜொக் சோன்ஃப்ரில்லோ, உணவு தொடர்பான பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்தினார்- அதில் உலகின் பல தொலைதூர சமூகங்களின் உணவுகள் குறித்த நொமாட் செவ் பிரபலமானது.
ரெஸ்டோரன்ட் ரிவொலுசன் செவ் எக்சேஞ் போன்ற நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்தார்.
2016 இல் அவுஸ்திரேலியாவின் சுதேசிய உணவுகள் குறித்த கவனத்தை ஈர்ப்பதற்காக ஜெவ் ஒரனா பௌன்டேசனை ஆரம்பித்தார்.
எனினும் அவர் மிகப்பெருமளவானவர்களின் மனதை கவர்ந்தது – அவுஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான மாஸ்டர் செவ் மூலமே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சி மூலம் அவர் அவுஸ்திரேலிய குடும்பங்களின் பிரிக்க முடியாத உறுப்பினரானார்.