கிளிநொச்சியில் இடம்பெற்ற சமத்துவக் கட்சியின் சமத்துவ மேதினம்

112 0
 

அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்போம், மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் எனும் தொணிப்பொருளில் சமத்துவக் கட்சியின் மே தினம் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  இன்று பெருமளவான மக்களின் பங்கேப்புடன் இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சமத்துவக் கட்சியின்  தவிசாளர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு தொழிற்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் சிவில் மற்றும் பொது அமைப்பின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பெருளமானவர்கள் கலந்துகொண்டனர்.

பல தொழிற்ச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு  உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றி சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார்,

நாட்டில் சுதந்திரத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் உருவாக்குவதற்குப் பதிலாக அதற்கு எதிராகவே ஆட்சி நடாத்தப்படுகிறது.

சுதந்திரத்துக்குப் பின்னர் நாடு சிந்திய கண்ணீரும் இரத்தமும் கொஞ்சமல்ல. இதிலிருந்து நாம் மீள வேண்டும். இனியும் சம்பிரதாயமான அரசியல் வாக்குறுதிகளை நாம் நம்ப முடியாது.

சம்பிரதாயமான மேதின நிகழ்வை நடாத்துவதில் அர்த்தமில்லை. இன்று பிற நாடுகளிலும் சர்வதேச வங்கிகளிடத்திலும் அடமானமாகியுள்ள நாட்டில்  நாம் போராடாமல் இருக்க முடியாது. எமது போராட்டம் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாக இருக்கட்டும். மக்களின் விடுதலையை நோக்கியதாக அமையட்டும். எனத் தெரிவித்தார்.