சர்வதேச நகர்வுகளின் படி கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டாம் என கூறுவது அத் தீர்மானங்களை இனிமேல் நிறைவேற்ற வேண்டாம் என கூறுவதற்கு சமனாகும்-எம்.ஏ.சுமந்திரன்(முழுக்காணொளி)

425 0

இந்திய வெளியுறவுத்தறை செயலாளர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சந்தித்த போது பெறக்கூடியதை பெற்று முன்னெறுங்கள் என்று கூறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பருத்தித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற தற்போதைய அரசியில் நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டதற்கு பொறுப்பானவர்களே காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நகர்வுகளின் படி கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டாம் என கூறுவது அத் தீர்மானங்களை இனிமேல் நிறைவேற்ற வேண்டாம் என கூறுவதற்கு சமனாகும் என குறிப்பிட்டார்.