இன்று தென்கொரியா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி

89 0

தென் கொரியாவின் இன்சியான் நகரில் இடம்பெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று செவ்வாய்கிழமை அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை இக்கூட்டம் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் ஆளுநர்கள், முக்கிய உலகளாவிய வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் மூத்த ஊடகப் பிரதானிகள்  உட்பட சுமார் 3000 – 4000 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்ளும் ஒரு உயர்மட்ட நிகழ்வாகும்.

4ஆம் திகதி இடம்பெறவுள்ள ஆளுநர்களுக்கான வர்த்தக அமர்வில் இலங்கையின் தற்போதைய பொருளாதார முன்னேற்றங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தற்போதைய ஈடுபாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இந்த நிகழ்வின் பக்க அம்சமாக பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.