முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தில் நீராட சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (26) பகல் குளத்தில் நீராடிய போது ஒருவர் நீரில் மூழ்கிய போது அவரை காப்பாற்ற சென்றவரும் நீரில் மூழ்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்த இருவரும் சகோதரர்கள் ஆவர். உயிரிழந்த இருவரது உடல்களும் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த இருவரும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து மரணவீட்டில் கலந்துகொள்ள வந்தவர்கள் என தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.