மட்டக்ககுளி, மோதரை மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று புதன்கிழமை (26) கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அங்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு திறந்த நீதிமன்றத்தில் பிரதிவாதிகளுக்கு திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது.