காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயதுச் சிறுமியொருவர் அதிகளவு பரசிட்டமோல் வில்லைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
உடுவெல்ல, உடுஹெந்தென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஷாமலி தருஷி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் பாடசாலையொன்றில் 2ஆம் தரத்தில் கல்வி கற்றவராவார்.
கம்பளை பிரதேச வைத்தியசாலையில் இரண்டு தடவைகள் சிறுமியின் பெற்றோர் மருந்தை பெற்றுள்ளனர்.
இருப்பினும், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவுக்குப் பதிலாக வைத்தியசாலையின் மருந்தகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வயது வந்தோருக்கான டோஸ் குழந்தைக்கு வழங்கப்பட்டதால் சிறுமி இந்த மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டுள்ளார்.
இதனையடுத்தே, இந்த மரணம் நிகழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.