சுயாதீன தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் மீது நிறுவன அதிகாரி பாலியல் தொந்தரவு : விசாரணைக்கு குழு நியமிப்பு !

81 0

சுயாதீன தொலைக்காட்சி ஊடகவியலாளரான பெண் ஒருவரை அதே தொலைக்காட்சி நிறுவனத்தின் அதிகாரியொருவர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் தொடர்பில் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்டத்தரணியின் தலைமையில் சுயாதீன குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் பந்துல குணவர்தன செவ்வாய்க்கிழமை (25) தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவரான சட்டத்தரணி சுதர்சன குணவர்தன இந்த விவகாரம் தொடர்பில் தமக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சின் செயலாளரிடம் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரை முறைப்பாடு செய்யுமாறு கூறியிருந்தபோதிலும், அவர் இதுவரையில் அவ்வாறு முறைப்பாடு செய்யவில்லை எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.