மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு காத்தான்குடி வாழைச்சேனை மத்தி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 25ம் திகதி வரையான காலப் பகுதியில் 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 22 வயது இளைஞர் ஒருவர் மரணத்தைத் தழுவியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு நோயை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டங்கள் மாவட்ட ரீதியாக இடம்பெற்று வருகின்றன.ஒத்துழைக்காதவர்கள்மீது சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.