கொழும்பு நகரில் நான்கு பல மாடி வாகன நிறுத்துமிடங்கள் அமைக்க அரசு நடவடிக்கை !

123 0
கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நாளாந்தம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் கொழும்பு நகரில் நான்கு பல மாடி வாகன தரிப்பிடங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது பொதுத்துறை மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இந்த வாகன தரிப்பிடங்களை நிர்மாணிக்கவுள்ளது.அவற்றில் இரண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையாலும் மற்றைய இரண்டு தனியார் நிறுவனத்தாலும் கட்டப்படும். கொழும்பு டெலிகொம் நிறுவனத்திற்கு முன்பாக, நாரஹேன்பிட்டி, பழைய மீன் சந்தை பகுதிகளிலும் இந்த வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட உள்ளன.இதேவேளை கொழும்பு 02, யூனியன் பிளேஸில் தனியார் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட பொது வாகன தரிப்பிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிவினால் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது .தனியார் நிறுவனத்தால் 1,400 மில்லியன் ரூபாய் செலவில் இந்த கார் பார்க்கிங் கட்டப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் உரிமையானது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது .இந்த எட்டு மாடி வாகன நிறுத்துமிடம் சுமார் 300 வாகனங்களை நிறுத்தும் திறன் கொண்டது. இதன் மாதாந்த வருமானத்தில் 20% நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.