பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகாவில் பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிய 2 சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (22) விசேட பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் கைதான இருவரும் கைப்பற்றப்பட்ட அந்த இரண்டு வாகனங்களினதும் சாரதிகள் என கூறப்படுகிறது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட இரண்டு வாகனங்கள் மற்றும் கைதான சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை (24) கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.