கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை சந்தேக நபராக பெயரிடுமாறு பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியவர்களுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது குற்றஞ்சாட்டுமாறு பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் கடந்த வருடம் மே 9ஆம் திகதி காலி முகத்திடலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 33 சந்தேக நபர்களை பெயரிடுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.