80வருடங்களிற்கு முன்னர் 1050 அவுஸ்திரேலியர்களுடன் மூழ்கடிக்கப்பட்ட ஜப்பானிய கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மிகமோசமான கடல்சார் வரலாற்று சம்பவம் என வர்ணிக்கப்படும் அனர்த்தத்தில் அமெரிக்காவின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் சிதைவுகள் கடலிற்கு அடியில் 4000 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மொன்டிவிடியோ மறு என்ற கப்பலின் சிதைவுகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் உலக யுத்தத்தின் போது 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஸ்டேர்ஜென் என்ற கப்பல் மேற்கொண்ட தாக்குதலில் இந்த கப்பல் 1005 பேருடன் மூழ்கியது.
கப்பலில் போர்க்கைதிகளும் கைதுசெய்யப்பட்ட பொதுமக்களும் உள்ளதை அறியாமலேயே அமெரிக்கா இந்த தாக்குதலை மேற்கொண்டது.
அவ்வேளை 15 வயது சிறுவன் உட்பட 60 வயது முதியவர் உட்பட பல பொதுமக்கள் கப்பலில் காணப்பட்டனர்.
அவ்வேளை அவுஸ்திரேலியாவின் பகுதியாக காணப்பட்ட கினியில் (தற்போது பப்புவா நியுகினி) ரபோல் என்ற நகரம் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து கைதுசெய்யப்பட்டவர்களும் மீட்கப்பட்டவர்களும் இந்த கப்பலில் காணப்பட்டனர்.
இந்த கப்பலை கண்டுபிடிப்பதற்காக குழுவொன்று ஏப்பிரல் மாதம் ஆறாம் திகதி தென்சீன கடலின் வடமேற்கு லூசனில் இருந்து புறப்பட்டது.
அதநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இந்த குழுவினர் 12 நாட்களின் பின்னர் தென்சீன கடற்பரப்பில் இந்த கப்பலின் சிதைவுகளை மீட்டுள்ளனர்.
கடல்சார் தொல்லியல் நிபுணர்கள் கடற்படை நிபுணர்கள் உட்பட பலர் அடங்கியகுழு குறிப்பிட்ட கப்பலே இது என்பதை உறுதி செய்துள்ளனர்.