சூடான் தலைநகரிலிருந்து அமெரிக்க இராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பத்தவர்களையும் அமெரிக்க இராணுவம் வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் இதனை உறுதி செய்துள்ளார்.
எனது உத்தரவின் பேரில் அமெரிக்க படையினர் அமெரிக்க இராஜதந்திரிகளையும் அவர்களது குடும்பத்தவர்களையும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என பைடன் தெரிவித்துள்ளார்.
சூடான் தலைநகரில் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் மூன்று உலங்குவானூர்திகள் தரையிறங்கி சுமார் 100 பேரை வெளியேற்றியுள்ளன.