சைட்டம் போதனா வைத்தியசாலை அரசின் கட்டுப்பாட்டில்- ராஜித

267 0

சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களுக்கு செயற்பாட்டுப் பயிற்சி வழங்கும் வைத்தியசாலையை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று   கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்குக் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து கலந்துரையாடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்வரும் 9 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் சகல தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சைட்டம் பிரச்சினை தொடர்பில் தெளிவான தீர்மானத்துக்கு வரவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.