தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் மனநோயினால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும். இதனூடாக மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடும் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன், மனநோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு தாகம் குறைவாக இருக்கும். அதனால் அவர்கள் நீரிழப்புக்கு ஆளாக நேரிடும்.அதேவேளை அதிக வெப்பமான காலநிலை காரணமாக குழந்தைகளின் சிந்திக்கும் திறன் குறைவடையக்கூடும். இதனால் பிள்ளைகளுக்கு கல்விச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.