வவுனியா மாவட்டம் வெடிவைத்தகல் தமிழ் கிராமத்திற்கு 730 சிங்கள வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இச்செயற்பாடானது, எதிர்காலத்தில் வவுனியா – வடக்கு பிரதேச செயலக நிர்வாகம் பெரும்பான்மையினரின் கட்டுப்பாட்டில் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபகர் கே.தேவராஜா தெரிவித்தார்.
இவ்வாறான நிலை தொடராதிருப்பதற்காக சாத்வீக வழியில் போராட்டம் முன்னெடுக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா வெடிவைத்தகல் 221ஏ தமிழ் கிராமத்தில் 2016ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 730 சிங்களவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்ததிற்கு முன்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தமிழ் மக்கள் மட்டுமே வாழும் பட்டிக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவின் வாக்காளர் இடாப்பில் 3 ஆயிரம் பெரும்பான்மையினர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லை நிர்ணயம் பிழையெனத் தெரிவித்த நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் திருத்தம் செய்தது.
இதன்போது 2016 வாக்களாளர் இடாப்பில் தனித்து தமிழ் மக்கள் வாழும் கிராமமான வெடிவைத்தகல்லு கிராம சேவையாளர் பிரிவில் 730 சிங்களவர்கள் வாக்களார்களாக உள்ளடக்கியுள்ளது இதன்மூலம் வவுனியா வடக்கு பெரும்பகுதி பெரும்பான்மை இனத்தின் வசம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.