நீதிபதியை வழிமறித்து நெடுந்தீவு மக்கள் போராட்டம்

106 0

ஊர்காவற்துறை நீதவான் நெடுந்தீவில் படுகொலை இடம்பெற்ற இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு சடலங்களை பார்வையிட்டுள்ளார்.

கடற்படையின் விசேட படகின் மூலம் ஊர்காவற்துறை நீதவான், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் விசேட பொலிஸ் அணிகள் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

இதன்போது சடலங்களை பார்வையிட்டு நீதவான் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிய போது நெடுந்தீவு மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெடுந்தீவு இறங்குதுறையில் ஒன்றுகூடிய மக்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யுமாறு கோரி அதிகாரிகளை முற்றுகையிட்டிருந்தனர்.

அத்துடன் நெடுந்தீவின் பாதுகாப்பு எங்கே? கொலைகாரனை உடனடியாக கைது செய்! போன்ற பாதாதைகளை தாங்கியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.