கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி பொலிஸ் வாகனம் தாக்கப்பட்டு அதன் பாகங்கள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 12 ஆகிய இடங்களில் வசிக்கும் 18, 31 மற்றும் 46 வயதுடையவர்களே கைதானவர்களார்.
சந்தே கநபர்கள் இன்று (20) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.