இம்முறை யால போகத்திற்காக MOP உரத்தின் விலையை 4,500 ரூபாவினால் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
50 கிலோ MOP உரம் ஒரு மூட்டை 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால், அந்தத் தொகையை விவசாயிகள் தாங்கிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான இறுதித் தீர்மானம் அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உரங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் உர நிறுவனங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதால், இந்த போட்டியின் அனுகூலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.