தூத்துக்குடியில் கடல் சீற்றம் மற்றும் கடல் உள்வாங்குதல் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.
தூத்துக்குடி தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் பகுதி, ராஜபாளையம் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று கடல்நீர் கரையைத் தாண்டி சுமார் 60 அடி தூரம் ஊரை நோக்கி வந்து, சாலையை தொட்டு தேங்கி நின்றது. கடற்கரையில் உள்ள மீன் ஏலக்கூடம், ஆலயம் உள்ளிட்டவற்றை கடல்நீர் சூழ்ந்தது. கடல் அலையின் வேகமும் அதிகமாக இருந்தது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர்லூர்து கூறும்போது, “3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அதிக சீற்றத்துடன் கடல் காணப்படுகிறது. பகல் நேரம் என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. படகுகள் அனைத்தும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுவிட்டன” என்றார்.