கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனையின்றி பேச முன்வர வேண்டும்-டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன

258 0

தேசிய அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சுப் பதவிகளை துறந்தாலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக ஆட்சியமைக்க முடியாது என அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிலைமையில் நாம் செய்ய வேண்டியது கட்சியைப் பலப்படுத்துவதாகும். இதற்காக சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் சொய்ஷா நேற்று தனியார் ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விடுத்த அறித்தல் தொடர்பில் பதிலளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சகலரும் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலக வேண்டும் என சொய்ஷா எம்.பி. தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு எதிர்க் கட்சி  கலந்துரையாடலில் கலந்துகொள்வதாயின் நிபந்தனையின்றி முன்வர வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.