ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க இலங்கை மாற்று யோசனையொன்றை நோக்கி தயாராக வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் கலாநிதி பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மந்தகெதியில் உள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
ஐ.நா. தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து அவரிடம் வினவிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை மீது ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனைகளை ஒழுங்கான முறையில் நிறைவேற்றப்படாமை குறித்து ஐ.நா. இம்முறை அழுத்தங்களை பிரயோகித்துள்ளது.
ஐ.நா.வின் இந்த யோசனைகளை மீண்டும் நிறைவேற்ற காலம் கேட்டிருப்பது பொருத்தமான தீர்வு அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.