திட்டமிடப்பட்ட இந்த வருடத்திற்கான பொருளாதா வளர்ச்சி பின்னடைவினை காண்பதற்கான ஏதுநிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் கடுமையான வரட்சி, அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கைகள் மற்றும் ஐரோப்பாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல்கள் காரணமாகவே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலை குறித்து சர்வதேச நாணய நிதியமும் கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசாமி, 2017ஆம் ஆண்டில் 5.5 முதல் 6 சதவீதமான பொருளாதார வளர்ச்சியினை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்இ ஜி.எஸ்.பீ. பிளஸ் சலுகைக்கான வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்த செயல் விளைவுகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக ஏற்றுமதி நடவடிக்கைகள் மேம்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.