சர்வதேச நீதவான்களின் பங்களிப்பினை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியில் அரசாங்கம்

259 0

யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பினை நீர்த்துப்போகச் செய்யம் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சர்வதேச நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதி விசாரணைப் பொறிமுறைமை பற்றி பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச நீதவான்களின் பங்களிப்புடன் கூடிய என்ற சர்ச்சைக்குரிய பரிந்துரையை நீர்த்துப் போகச் செய்ய உலக நாடுகளின் உதவியை அரசாங்கம் நாடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்போ அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைமையே நடைமுறைச் சாத்தியமற்றது என அண்மையில் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்திருந்தனர்.

எனினும் கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரி வருகின்றது.  இந்தநிலையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு மற்றும் கலப்பு நீதி மன்ற விசாரணைப் பொறிமுறைமை ஆகிய பரிந்துரைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல நாடுகளின் உதவிகளை கோருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.